Designed by Iniyas LTD
பாதாள உலகக் கோஷ்டியின் மிக முக்கிய புள்ளி சுட்டுக்கொலை!
பாதாள உலகக் கோஷ்டியின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவரான, ‘கொஸ்கொட லொக்கு’ என்று அறியப்பட்ட, கொஸ்கொடவை வசிப்பிடமாகக் கொண்ட ஷாமர அபேசேகர (வயது 24), இனந்தெரியாத நபர்களினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், களுத்துறை- வெலிப்பென்ன தியகொறடுவ எனுமிடத்தில், திங்கட்கிழமை இரவு 9.20க்கு இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான மூவர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதிலொருவரே மரணமடைந்துள்ளார்.
ஏனைய இருவரும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என, வெலிப்பென்ன பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த வெலிப்பென்ன பொலிஸார், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.