தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த 200 நீர் இறைக்கும் இயந்திரங்கள்

கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி  மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்  கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை இராணுவத்திடம் தருவதாக தெரிவிக்கப்பட்டது .

இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சி சிறீதரன் அவர்கள் பிரதேச சபைகள் இருக்கிறது எனவும் அவற்றை அவர்களிடம் கையளிக்குமாறும் இராணுவத்தை கொண்டு எல்லாவற்றையும் செய்வதாயின் பிரதேச சபைகளை மூடிவிடுமாறும் கூறியுள்ளார்.

அதனை அடுத்து நீர் இறைக்கும் இயந்திரங்கள்   பிரதேச சபைகளிடம் ஒப்படைத்து ஆக்கள் பற்றாக்குறை இருப்பின் இராணுவத்தையும் உள்வாங்கும்    திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிகபட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது

Comments
Loading...