தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி வழங்கியுள்ள தாயக மக்கள் நலன் காப்பக அனர்த்த நிவாரண பணிக்குழு …

தாயக மக்கள் நலன் காப்பக அனர்த்த நிவாரண பணிக்குழு. இடைத்தங்கல் நலன் புரிநிலையங்களுக்கு நேரடியாக சென்று வெள்ளத்தால்  பாதிக்கபட்ட மக்களை பார்வயிட்டுள்ளனர்.

அங்கு ஆராய்ந்து தெரிவு செய்யப்பட்ட இடங்களான கிளி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு குமாரசாமிபுர பாடசாலை நலன்புரி நிலையத்திற்க்கும்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பொது நோக்கு மண்டபத்தில் உள்ள நலன்புரி நிலையத்திற்கும்.

முல்லை மாவட்ட பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சுகந்திரபுரம் கொலனி பாடசாலையில் அமைந்துள்ள நலன் புரிநிலையத்திர்க்கும்.அத்திய அவசிய மருத்துவப் பொருட்கள் அடங்கிய பொதிகள் மக்கள் நலன் காப்பகத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் நலன் காப்பகத்தால் பொறுப்பெடுத்து நடாத்திவரும் நலன் புரி நிலையமான ஒட்டுசுட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட முறிகண்டி இந்துபுரம் நலன்புரி நிலையத்திற்கும்  சமைத்த உணவை வழங்யுள்ளனர்.

Comments
Loading...