தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பான் கீ – மூன், பாதுகாப்பு சபைக்கு முன்வைத்த அறிக்கையை ததேகூ வரவேற்கின்றது – சுரேஷ்பிரேமச்சந்திரன்

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர்,சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அரசு இதுவரையில் தகவல்களை வெளியிடவில்லை. எனவே, அது தொடர்பில் விவரங்கள் வெளியான பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார்.Suresh_Premachandran

இதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூன், பாதுகாப்பு சபைக்கு முன்வைத்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு விசாரணையில் கூட்டமைப்புக்கு நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேச விசாரணையே தேவை என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் சுரேஷ் எம்.பி. மேலும் கூறினார்.

Comments
Loading...