தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாரதிய ஜனதா எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி D.K. ரவி மரணமடைந்தது தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என அம்மாநில பாரதிய ஜனதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.bjp

இது தொடர்பாக அம்மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ரவியின் மரணம் குறித்த சர்ச்சை இன்று கர்நாடக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. சிபிஐ விசாரணை கோரி எதிர்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டதால், அவை வரும் திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வெளியேயும் தர்ணாவில் ஈடுபட்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Comments
Loading...