தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாலிநகர் பகுதியில் இளைஞர்கள் அடாவடி கட்டுப்படுத்த கோரிக்கை…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட பாலிநகர் பகுதியில் இளைஞர் குழு ஒன்று அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கடைத்தொகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இரவு வேளையில் வரும் இளைஞர் குழுக்கள் வாழ்கள் பொல்லுகள் கொண்டு கடைகளுக்கும் கடைகளில் உள்ள பொருட்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றனர்

இரவு வேளைகளில் மதுபோதையில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதோடு பொலிசாரிடமும் முறையிடப்பட்டுமுள்ளது குறித்த இளைஞர் குழுக்களின் அடாவடியை கட்டுப்படுத்துமாறு வர்த்தகர்கள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments
Loading...