தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் புகைத்தலுக்கு அடிமையாகும் மாணவர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கு அடிமையாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கட்ந்த 29 ஆம் திகதி  செம்மலைப்பகுதியில் கல்விகற்றுவரும் 14 அகவை மாணவர்கள் கூட்டாக சேர்ந்து புகைத்தல் பழக்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை கண்டித்த அதிபர்பெற்றோர்களை அழைத்துவருமாறு அனுப்பியுள்ளார்

இன்னிலையில் தான் செய்தது பெற்றோருக்கு தெரிந்தால் அவமானம் என்ற நிலையில் கி.கிருசிகன் என்ற மாணவன் பாடசாலை சீரூடையுடன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்னிலையில் 29.11.18 அன்று வள்ளுவர் புரம் பாரதி மகா வித்தியாலயத்திலும் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் சிகரட் புகைத்துள்ளமையினை பாடசாலை அதிபர் பெற்றோர்களை அழைத்து கண்டித்துள்ளதுடன் அரச திணைக்களங்களுக்கும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

சிறுவர் நன்நடத்தை பிரிவினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பாடசாலை சமூகத்திடம் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவர்கள் ஜந்துபேரே இவ்வாறன செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

பாடசாi ரையில் சிகரட்டினை வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மாணவர்களை அதிபர் விசாரணைசெய்து பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு பிள்ளைகள் செய்த காரியத்தை எடுத்துரைத்துள்ளார்.

அதன்பின்னர் பெற்றோர்களிடம் மாணவர்களின் நல்லொழுக்கம் தொடர்பில் ஒப்புதல் கடிதம் ஒன்றினை வாங்கிவிட்டு சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தெரியப்படுத்திவிட்டுள்ளார்.

பாரதி வித்தியாசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பாவனையில் ஈடுபட்டு வருகின்றமையினை பிரதேச சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் பிரதேச்தில் போதைவஸ்து பாவனையும் அதிகரித்துள்ளமையும் காரணம் என தெரிவித்துள்ளார்கள்.

பாடசாலை மாணவர்கள் அவர்களின் வயத்திற்கும் அதிகமான பிரதேச இளைஞர்களையே நண்பர்காள வைத்துள்ளார்கள்.

பாடசாலையில் நல்ல கல்வியினை போதித்தாலும் மாணவர்களை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை கடைப்பிடிக்க வைப்பதும் ஆசிரியர்களின் கடமையாகும்

Comments
Loading...