Designed by Iniyas LTD
பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தண்டியுங்கள்!
’குற்றவாளிகளை தண்டியுங்கள் அல்லது நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்’ என்று புலந்த்சாகர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் உயிர்பிழைத்தோர் குடும்பத்தினர் கூறிஉள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் காரில் சென்ற தாய்- மகளை கடத்திச்சென்று கற்பழித்ததுடன், நகை- பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இதுவரையில் மூன்று பேரை கைது செய்து உள்ளனர். இவ்விவகாரத்தில் உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடியை கொடுத்து உள்ளது. அகிலேஷ் யாதவ் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திஉள்ளன.
பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய ஞாயிறு அன்று போலீசுக்கு 24 மணிநேரம் அவகாசம் கொடுத்தார். ஆனால் இதுவரையில் மூன்று பேரை மட்டுமே போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரில் லக்மி சிங் பேசுகையில், “குற்றத்தில் 5-6 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். கும்பலுக்கு தலைவனாக இருந்தவனை அடையாளம் கண்டுவிட்டோம். அவனது மீது உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் குற்றவழங்குகள் உள்ளது,” என்று கூறிஉள்ளார். பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக மாயாவதி பேசுகையில், “மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சமாளிக்க முடியவில்லை என்றால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யுங்கள்,” என்று கூறிஉள்ளார். மேலும் தனிப்பட்ட முறையில் அகிலேஷ் யாதவிடம் இருந்து விளக்கம் கோரிஉள்ளார்.
தற்கொலை செய்வோம்
இந்நிலையில் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் உயிர்பிழைத்த தாய்-மகளின் குடும்பத்தினர் ’குற்றவாளிகளை தண்டியுங்கள் அல்லது நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்’ என்று கூறிஉள்ளனர். “நாங்கள் கொள்ளையடிக்கப்பட்டோம். கொடூரமாக தாக்கப்பட்டோம். எங்களது மகளுக்கு என்ன நேரிட்டது என்பது எங்களுக்கு தெரியும்… குற்றவாளிகளை மூன்று மாதங்களில் தண்டிக்கவேண்டியது அவசியம், அப்படியில்லை எனில் நாங்கள் தற்கொலை செய்துக் கொள்வோம்,” என்று கூறிஉள்ளனர்.
தொடர்புடைய பதிவு