தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

A/L பரீட்சை இன்று ஆரம்பம்!

gceகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பிக்கின்றது.
இன்று ஆரம்பமாகும் உயர் தர பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி வரையில், 2 ஆயிரத்து 204 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 2 லட்சத்து 40 ஆயிரத்து 991 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.அவர்களில் 74 ஆயிரத்து 614 பேர், தனிப்பட்ட பரிட்சாத்திகளாவர்.
இதேவேளை பரீட்சை மண்டபத்துக்கு கைப்பேசிகள், ஸ்மார்ட் வொச் எனப்படும் திறன்கடிகாரங்கள் என்பவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நவீன உபகரணங்களை கொண்டு செல்கின்ற பரீட்சாத்திகள் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு எந்தவிதமான பரீட்சைகளிலும் தோற்ற முடியாத படிக்கு தடை விதிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார எச்சரித்துள்ளார்.
அதேநேரம், பரீட்சை மோசடிகளுக்கு உதவுகின்ற வெளிநபர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் பரீட்சை மோசடிகளுக்கு ஒத்துழைக்கின்ற வெளிநபர்கள் தொடர்பிலும், பரீட்சை சம்மந்தமான ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் முறைப்பாட்டை தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 1911, 011 278 4 208  tel:0112 2078420537, ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

Comments
Loading...