Designed by Iniyas LTD
பிரதமரின் பாதுகாப்பு பிாிவினா் காங்கேசன்துறை கடற்படைமுகாம் பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பு..
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ,காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந் நிலையில், பிரதமரின் பாதுகாப்பு பிாிவினா் காங்கேசன்துறை கடற்படைமுகாம் பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இடம்பெற்றுள்ளதாகவும், கூறப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை
யாழ்ப்பாண செல்லவுள்ள பிரதமர் அங்கு, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதோடு பலாலி வானூர்தித் தளத்தையும் அவர் சென்று பார்வையிடவுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் செல்லவுள்ள இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவரது பாதுகாப்புப் பிரிவினரின் பொறுப்பாகும். அதற்காக குறித்த இடங்களுக்கு முற்கூட்டியே சென்று நிலைமைகளை ஆராய்வது பாதுகாப்புப் பிரிவின் வழமையான நடவடிக்கையாகும்.
அதற்கு அமைவாக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பிரதமர் பாதுகாப்புப் பிரிவினர் சென்றநிலையில் அவர்களிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
