தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரத்ததானம் வழங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்…

யாழ் போதனா வைத்தியசாலையில்.சத்திர சிகிச்சை  மற்றும் விபத்துப் பிரிவுகளுக்கு அவசரமாக தேவைப்படும் குருதி வகைகள் தொடர்பாக யாழ் வைத்திய சாலை நிர்வாகத்தினரால் அவசரமாக இரத்ததானம் கோரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் இன்றைய தினம் யாழ் வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான நிகழ்வை ஒழுங்குபடுத்தி இருந்தார்கள்..

இந்நிலையில் இக் குருதி கொடை நிகழ்வில் கணிசமான மாணவர்கள் கலந்து கொள்வதாகவும்,  இனி வருங் காலத்தில் இவ்வாறான நிகழ்வை தொடர்ச்சியாக வழங்குவதற்கும்  ஏற்பாடு செய்யப் போவதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இவ்வாறான குருதிக் கொடையினை சென்ற வருடம் மாவீர்ர் தினத்திலும் மட்டக்களப்பு வைத்தியசாலயில் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களால் வழங்கப்பட்டமை நினைவில்கொள்ளத்தக்கது.

இதேவேளை தமிழ் இனத்தின் இப்படியான இளையோரின் எழுச்சியானது எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments
Loading...