Designed by Iniyas LTD
பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்!
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையம் மூலம் டெல்லி புறப்பட்டார்.பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் காலை 6 மணியளவில் பன்னீர் செல்வம் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் 8 செயலாளர் உடன் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக முதல்வரின் டெல்லி பயணம் குறித்து தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (19-ந்தேதி) பிரதமரை டெல்லியில் சந்திக்கிறார்.
அப்போது தமிழ்நாட்டில் ‘‘வார்தா’’ புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்கவும் மற்றும் தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளிக்க உள்ளார்.
மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘‘பாரத ரத்னா’’ விருது அளிக்க வேண்டியும், முழு திருவுருவ வெண்கலச் சிலையினை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் கடிதங்களை அளிக்க உள்ளார்” இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு உள்ள நிலையில், நேற்று மாலை கவர்னர் வித்யாசகர் ராவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.