தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – நிமல் சிறிபால டி சில்வா …

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவரை நீக்க வேண்டும் எனில் ,  நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே நீக்க முடியும் என  தெரிவிக்கபட்டுள்ளது.

இதனை நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இதனை  கூறியுள்ளார்.

மேலும் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை எனவும்  ஜனாதிபதியே நியமிக்க முடியும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா  இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...