Designed by Iniyas LTD
பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் காற்று இல்லாத பலூன் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஓர் குறியீடாக பிரதமருக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ளப்பட்ட போதிலும் அது அரசாங்கத்திற்கு எதிராகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நாடாளுமன்ற விவாத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நீண்ட நாட்களாக தான் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வருவதாகவும், . தனது சேவை காலத்தில் சில நம்பிக்கையில்லா தீர்மானங்களை பார்த்திருப்பதாகவும், எனினும், ஆரம்பத்திலேயே காற்று போன பலூன் மாதிரியான நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவே எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ராஜபக்சக்கள் தூர நோக்குடன் செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.