Designed by Iniyas LTD
லஞ்சம் பெற்ற அரச பணியாளர்களிற்கு 4 வருட சிறைதண்டனை
அம்பாறை மாவட்ட நீதிமன்றில் வழங்கப்பட்ட உத்தரவொன்றின் பிரதியினை பெற்றுக்கொடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் இருவருக்கு 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பதிவாளர் மற்றும் எழுத்தாளருக்கு இந்த தண்டனை விஉதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் , பதிவாளர் ஆறாயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் எழுத்தாளர் மூன்றாயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி உத்தரவிட்டுள்ளார்