தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரபலமான டிவீட்களை எளிமையாக படிக்கும் வகையில் டிவிட்டர்

வழக்கமான முகப்பு பக்கத்தை மாற்றி, பிரபலமான டிவீட்களை எளிமையாக படிக்கும் வகையில் டிவிட்டர் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.twitter

இது நாள் வரை டிவிட்டரை லாக் இன் செய்து, டைம்லைனில் அனைத்து டிவீட்களையும் படித்திருப்போம். இப்போது, லாக் இன் செய்யாமலே முகப்பு பக்கத்தில் பிரபலமான டிவீட்களை படிக்கும் வகையில் வரிசைப்படுத்தியுள்ளது டிவிட்டர் இணையதளம்.  இது தொடர்பாக டிவிட்டர் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி மக்கள் டிவிட்டரை பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற வசதியை ஏற்கனவே, அமெரிக்காவிலும், ஜப்பானிலும் அறிமுகம் செய்யப்பட்டாலும், நேற்றிலிருந்து இந்தியா உள்ளிட்ட  23 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம், உலக நிகழ்வுகளை எந்த நேரத்திலும் லாக் இன் செய்யாமலே படிக்கலாம் என்றும் டிவிட்டர் தெரிவித்துள்ளது.

Comments
Loading...