தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டு நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

AR-2ஸ்ரீலங்காவின் 68வது தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமக்கு நீதி வழங்க வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணாமல்போனவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம், காந்தி சேவா சங்கம் மற்றும் காணாமல்போனவர்களின் உறவுகள் ஏற்பாட்டில் காந்தி பூங்கா அருகில் இந்த ஆர்பாட்டம் இடம் பெற்றது.

ஆர்பாட்டத்தின் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,

“தமிழருக்கு ஒரு நியாயமா? நீதி வேண்டும், அரசே எங்கே எமது பிள்ளைகள் கண்டு பிடி. எனது பிள்ளைகளை திருப்பித் தா! என பாதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.”

 

Comments
Loading...