தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரபல பாலிவுட் நடிகரின் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தற்போது ‘கேசரி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்தது.

வெடித்த குண்டு

இதன்போது அங்கு  திடீரென அங்கு தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது

படத்தின் சண்டை காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாக கூறப்படுகிறது.

இதன் காரணாமாக  படப்பிடிப்பிற்காக  பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் முற்றிலும் கருகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேகமாகப் பரவிய தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்துள்ளனர்.

இந்த விபத்தில் படக்குழுவினர் எவ்வித  காயமும்  ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை நடிகர் அக்‌ஷய் குமார்   தமிழில் ரஜினிக்கு வில்லனாக ‘2.O’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...