Designed by Iniyas LTD
பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தை
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்வது என இந்தியாவும் பிரான்சும் முடிவு செய்துள்ளன.
பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடடிக்கைகைய இணைந்து மேற்கொள்ள உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லக்வி விடுதலை செய்யப்பட்டதும் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
பயங்கரவாதம் புதிய வடிவம் பெற்று வரும் நிலையில் அதனை ஒழிக்க பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருப்பதாக மோடி குறிபிட்டுள்ளார். எந்த ஒருநாடும் பயங்கவாதிகளுக்கு அடைக்களம் தரக்கூடாது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.