Designed by Iniyas LTD
பிறந்தநாள் வாழ்த்து

எமக்கு இறைவன் தந்த பெரும் சொத்தே!
எம் இனத்தைக் காக்க பெரும் விருட்சமாகிய
எமது அண்ணனே
காலம் எமக்களித்த
தமிழீழத்தின் தாயானவனே
தமிழினத்தின் துயர்துடைக்கவென
உங்களை இன்நாளில்
பிரமன் தந்தானண்ணா …
உம்முடன் நாம் உம் பிறந்தநாளில்
உணவுண்டு களித்தோம் அண்ணா…
இப்போ உம் பிறந்தநாளில்
உங்கள் வதனம் தேடி ஏங்கித் தவிக்கின்றோம்!
எம் அன்பான அண்ணணே
எங்குதான் நீங்கள் இருந்தாலும்
மறுபடியும் உங்கள் பிறந்தநாளில்
உங்கள் கரத்தால் நாம் உணவுண்ண
வரவேண்டும் …
என்றும் அண்ணனின் புகழ்
வாழவேண்டும் !
எம் அண்ணன் பாதத்தின் பின்
எம் பாதங்கள் பதியவேண்டும்…..
என்றென்றும் எமக்கு வழிகாட்டும்
நாயகனாய்த் திகழ வேண்டும்…..
அடுத்த வருடம் உங்கள் அருகில்
நாம் உங்களை வாழ்த்துவோமண்ணா
தங்களுக்கு என்றுமே எம் சிரம் தாழ்ந்த
பலவண்ண பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
எங்கிருந்தாலும் தங்களுக்கு எம்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா …
போராளி
செ.நிமலன்.