Designed by Iniyas LTD
பிறப்பு சான்றிதழுடன் அடையாள அட்டை இலக்கமும் பதிவாகும் டிஜிட்டல் பதிவு நடவடிக்கை…
இனிவரும் காலங்களில் பிறப்பு சான்றிதழுடன் அடையாள அட்டை இலக்கமும் பதிவாகும் டிஜிட்டல் பதிவு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நாயக திணைக்களத்தின் மக்கள் உரிமை சர்வதேச தரம் எனும் அறிமுக நிகழ்வு நேற்று ( 16.03.19) மாவட்டங்கள் தழுவியரீதியில் நடைபெற்றுள்ளன.
தொடர்புடைய பதிவு
153 ஆண்டுகள் பழமைவாய்ந்த பதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவைகளை நவீனமயப்படுத்தல் திட்டம் நாடு தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் தலைமையில் காணிகள் பதிவுசெய்தல் ஒருநாள் சேவை மற்றும் தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
மேலும் பதிவாளர் நாயக திணைக்களத்தின் பதிவுகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பிறப்பு பதிவு 2019 ஆம் ஆண்டு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு அவர்களின் பிறப்பு பதிவு டியிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும்,
அதன் ஊடாக பிறப்பு சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் கூட குறிப்பிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கை மூலம் மக்களின் தேவைகளையும் சிறப்பான சேவைகளையும் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் முன்வந்துள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்