Designed by Iniyas LTD
பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார் ரோட்ரிகோ டுட்டெர்டே
பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ டுட்டெர்டே இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் மற்றும் 18,000 பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ரோட்ரிகோ டுட்டெர்டே பெரும்பான்மை சதவீத வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிராக ரோட்ரிகோ டுட்டெர்டே இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் 16-வது அதிபராவார்.
அந்நாட்டு உச்ச நீதிமன்ற துணை நீதிபதி முன்னிலையில், மலகனங் மாளிகையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பதவியேற்ற போது அவரது மகள் வெரோனிகா பைபிள் வைத்திருந்தார். பைபிள் மீது ஆணையிட்டு அவர் பதவியேற்றுக் கொண்டார்.