Designed by Iniyas LTD
இலங்கை தேர்தல் : ராஜபக்சே பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவிப்பு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று தனது சொந்த ஊரான தங்காலை, மெதமுலனவில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் எந்த கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார் என்பது குறித்து ராஜபக்சே அறிவிக்கவில்லை.