Designed by Iniyas LTD
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது அமைச்சரவை
தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை திருத்தத்தின் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 18 பேர் புதிதாக நேற்றைய தினம் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை புதிதாக பதவியேற்றுக் கொண்டவர்கள் தவிர ஏனைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் ஏற்கனவே இருப்பது போன்றே செயற்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
