தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய அமைச்சரவை மாற்றத்தில் நியமனம் பெற்றுள்ள அமைச்சர்கள் விபரம்

அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

விஜேதாச ராஜபக்‌ச

அந்தவகையில்   உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக விஜேதாச ராஜபக்‌ச நியமிக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா

அதோடு  நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல ரத்நாயக்க

மேலும்  திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவாகரம், தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

டீ.எம்.சுவாமிநாதன்

மீள் குடியேற்றம் மற்றும்,வட மாகாண அபிவிருத்தி,இந்து விவகாரா அமைச்சராக டீ.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மனோ கணேசன்

அரச கருமமொழிகள், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,

ரவீந்திர சமரவீர

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

தயா கமகே

சமூக நலன்புரி, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக தயா கமகேவும்  நியமிக்கப்பட்டுள்ளார்

இதேவேளை எதிர்பார்த்தளவு அமைச்சரவை மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதோடு, ஏற்கனவே அமைச்சுப் பதவிகளில் இருந்தவர்களுக்கு அதே அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...