Designed by Iniyas LTD
புதிய மீன்பிடி கொள்கையைக் கண்டித்து மீனவ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய மீன்பிடி கொள்கையைக் கண்டித்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மீனவ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரியில் 18 கிராம மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல், நாகை தலைமை தபால் நிலையம் முன் திரண்ட மீனவர்கள் மீனாகுமாரி குழு அறிக்கையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மீனாகுமாரி கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் மீனவர்கள், 12 கடல்மைல் தொலைவுக்கு மட்டுமே மீன்பிடிக்க வேண்டும், அதற்கு மேல் பன்னாட்டு கப்பல்கள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 12 கடல்மைலை தாண்டிச் சென்றால், மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. இந்த புதிய அறிவிப்புக்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டம் அமலானால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படும் எனவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.