Designed by Iniyas LTD
ஸ்ரீரங்கத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் விரைவில் கண்டறியப்படும்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 10 கம்பெனிகள் மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் விரைவில் கண்டறியப்படும் என தெரிவித்தார்.
புகார்களின் அடிப்படையில் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட 415 தேர்தல் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சக்சேனா தெரிவித்தார். இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக அரசியல் கட்சிகளின் சார்பில் 138 நட்சத்திர பேச்சாளர்கள் அனுமதி பெற்றுள்ளதாகவும், இதில் திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சக்சேனா தெரிவித்தார். இந்த பட்டியலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை என தெரிகிறது.