தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுக்குடியிருப்பில் இரணைப்பாலையின் அமைக்கப்படவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு..

புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப்பகுதியில் தனியார் ஒருவரினால் அமைக்கப்பட்டு வரும் உணவகத்துடன் கூடிய மதுபான விடுதியினை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில புதுக்குடியிருப்பில் நடைபெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தின் போது மதுவான நிலைத்தின் உரிமையாளரினால் கேட்கப்பட்டபொது இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த மதுபானம் மற்றும்உணவகம் அமைப்பதற்கு மதுவரி திணைக்களத்திடம் இருந்து விளக்க கடிதம் தருமாறு கோரப்பட்ட நிலையில் ,
பிரதேச செயலாளரினால் 1ஆம் கட்ட கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டாம் கட்டஆய்வு கடிதத்தில் 25 பேர் குறித்த பகுதியில் மதுபானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் இரண்டுபேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்
இன்னிலையில்  புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகம் முன்னால் பெண்கள் சிலர் எதிர்ப்பினை வெளிப்படுத்தி கவனயீர்ப்பு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையினை மதுவரித்திணைக்களத்திற்கு தான் தெரியப்படுத்தியுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
Comments
Loading...