தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பல்கேரியாவில் பாலியல் பலாத்காரம் செய்து செய்தியாளர் படுகொலை…

பல்கேரியா நாட்டில் பெண் செய்தியாளர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பல்கேரியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளரான விக்டோரியா மரினோவா ((Viktoria Marinova)) அண்மைக் காலத்தில் தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் சார்ந்த புலனாய்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ருசே ((Ruse)) நகரில் பூங்கா ஒன்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டநிலையில்,அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக பல்கேரிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் விக்டோரியா கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து அந்நாட்டு   போலீசார் விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இது ஐரோப்பிய யூனியனில் ஒரே ஆண்டில் நடைபெற்ற 3 -வது செய்தியாளர்  படுகொலை  செய்யப்பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது

Comments
Loading...