Designed by Iniyas LTD
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் தனியார் ஒருவரின் காணியில் குண்டு வெடிப்பு.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இன்று நண்பகல் குண்டுகள் சில வெடித்து சிதறியதில் அங்கே பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் காணிகளை துப்பரவு செய்து தீமூட்டிய போதே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைவிடப்பட்ட வெடிபொருட்களே இவ்வாறு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இறுதி யுத்தத்தின்போது போரில் ஈடுபட்ட இருதரப்பினரினால் கைவிடப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் ஆனந்தபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தற்பொழுதுவரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.