தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் இடதுசாரிகள்-விசிக நாளை ரயில் மறியல்

karaikalகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரி-காரைக்காலில் இடதுசாரிகள்-விசிக சார்பில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி நடுவர் மன்றம் சார்பில் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீர் விட வேண்டும். ஆனால் இதுவரை முழுமையாக இதுவரை காவிரி நீர் காரைக்காலுக்கு கிடைக்கவில்லை. தற்போது மேட்டூரில் இருந்து நீர் விடப்பட்டாலும், ஒரு சொட்டு நீர் கூட கடைமடை பகுதியான காரைக்காலுக்கு வரவில்லை.

இதனால் காரைக்காலில் 10 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலத்தில் சாகுபடி நடைபெறுமா என அச்சம் உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது, இதற்கு உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனக்கூறுவது தமிழகம், புதுவை மாநில மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். கூட்டாட்சி தத்துத்துவத்துக்க எதிராக கர்நாடக, மத்திய அரசுகள் செயல்பட்டு வருகிந்றன. கர்நாடக மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்நிலையை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ரயில் மறியல் போராட்டம்

இதைக் கண்டித்து புதுச்சேரி-காரைக்காலில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், ஆர்எஸ்பி, விசிக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.
புதுச்சேரி  அரசு நெல்லித்தோப்பு தொகுதியை மட்டும் கவனம் செலுத்தி திட்டங்களை தீட்டுவதாக புகார்கள் வருகின்றன. அரசு நிர்வாகம் வெளிப்படையாக அனைத்து தொகுதி மக்களுக்கும் சேருவதாக திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

சென்டாக் குளறுபடிக்கு மாணவர்களை காரணமாகக் கூறக்கூடாது. இதில் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. புதுச்சேரி அரசு இதற்கு துரித நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் ஆண்டுகளிலாவது சென்டாக் மூலம் முறையாக மாணவர் சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஸ்வநாதன்.

இடதுசாரி கட்சி நிர்வாகிகள் ஆர்.ராஜாங்கம், சோ.பாலசுப்பிரமணியன், அமு.சலீம், து.கீதநாதன், விஎஸ்.அபிஷேகம், விசிக தமிழ்மாறன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Loading...