Designed by Iniyas LTD
புது மூங்கிலாரில் வீதி விபத்து தந்தை மகன் படுகாயம்!
ஏ35 பிரதான வீதியில் புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 13வயதுடைய மகனும் 36வயது மதிக்கத்தக்க தந்தையும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.
தந்தையும் மகனும் வேகமாக மோட்டார்சைக்கிளில் வந்த வேளை தந்தைக்கு உள்ள ஒருவகை தலைச்சுற்று நோய் காரணமாக மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி அருகிலிருந்த வேலிக்குள் பாய்ந்ததிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 13 வயதை உடைய குட்டித்தம்பி என அழைக்கப்படும் சிறுவனும் 36 வயதுடைய மனோகரன் என்னும் தந்தையுமே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பொலீசார் மேற்கொண்டுள்ளனர் .