தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலிகளின் தங்கத்தை மறைத்து வைத்தாரா மகிந்த?

download (3)
மகிந்த ராஜபக்ச மோசடி செய்து பெற்றுக்கொண்ட பெருந்தொகையிலான தங்கம் பீகொக் மாளிகையில் நீச்சல் தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து அவர் அலரிமாளிகையினை விட்டு வெளியேறியிருந்தார்.

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சுகபோக வாழ்க்கை நடாத்திவந்த மகிந்த குடும்பம் அதன் பின்னர் சிறிய வீடு ஒன்றில் வசித்து வருவதாகவும், இதன் காரணமாக பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தாகவும் செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி லியனகே 73 கோடி ரூபா மதிப்பிலான தனது பீகொக் மாளிகையினை மகிந்தவிற்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்திருந்தும், பின்னர் தனது பீகொக் மாளிகையினை வழங்க முடியாது என தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு நிலையில் குறித்த மாளிகையின் நீச்சல் தடாகத்தில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அங்கு மண் போட்டு நிரப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே அங்கு மகிந்தவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பீகொக் மாளிகையின் உரிமையாளரான ஏ.எஸ்.பி லியனகே, குறித்த சம்பவமானது ஒரு வதந்தி எனவும் இதுதொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறுதிக்கட்டப் போரின் போது வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான தங்கமே பீகொக் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...