தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலிகளோடு புலியாக இருந்து போர்க்கால இலக்கியம் படைத்த நாட்டுப்பற்றாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் மறைவு..

புலிகளோடு புலியாக இருந்து போர்க்கால இலக்கியம்படைத்த இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்,அவர்கள் கடந்த 16 ஆம் திகதி தனது 66 வது அகவையில் காலமாகியுள்ளார்.

ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக, சிறந்த நாவலாசிரியராக, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்த இவர், பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

இணுவில் கிழக்கைச் சேர்ந்த, தம்பையா சிதம்பரநாதன் அவர்களின் மூத்த புதல்வரான இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்,அவர்கள்

முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்துவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்ளிட்ட  இவரது சிறுகதை தொகுப்புகளும், நாவல்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

இவரது படைப்புகள் சிங்கள மொழியாக்கம் செய்து நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

ஈழப்போராட்டத்தின் பின்னணியிலான வாழ்வியல் சூழலைப் பிரதிபலிக்கும் காத்திரமான இலக்கியப் படைப்புகளை இவர் வெளிக்கொணர்ந்தவர் என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.

இதேவேளை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்,அவர்கள்   இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...