Designed by Iniyas LTD
பூமிக்கடியில் ராஜபக்சேவின் நவீன சொகுசு பங்களா : அதிபர் சிறிசேன தகவல்
இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பங்களா ஒன்றை இலங்கை அதிபர் மாளிகையில் பூமிக்கு அடியில் கட்டியுள்ளார்.
இது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த சொகுசு பங்களாவில் உள்ளே நுழைவதற்கு ரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பங்களாவில் , தொலைபேசி, இன்டர்நெட், ஏ.சி. வசதி, பிரமாண்டமான தொலைக்காட்சிகள், நிலத்தடிக்கு மேலே அதிபர் மாளிகையை கண்காணிக்கும் கேமராக்கள் என பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேன அம்பலப்படுத்தினார். இந்த பங்களாவுக்கு மாத மின் கட்டணம் 30 லட்ச ரூபாய் என்றும், பராமரிப்பு செலவு மட்டும் 5 லட்ச ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இதனால், அதை தான் பயன்படுத்தவில்லை என அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
