தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பூவரசங்குளம் – நானாட்டான் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுகின்றது

பூவரசங்குளம் தொடக்கம் நானாட்டான் வரை உள்ள 5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட  பிரதான வீதி மிகவும் குன்றும், குழியுமாக காணப்படுகின்றமையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.unnamed

குறித்த வீதியை 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் பயண்படுத்துகின்றனர் .நானாட்டான் ம.வி பாடசாலை, நானாட்டான் வைத்தியசாலை, பிரதேச செயலகம், என்பன அப்பகுதியில் காணப்படுகின்றன.

தற்போது மழைக்காலம் என்பதனால் குறித்த வீதி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. பாடசாலை சீருடையுடன் செல்லும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பல தடவைகள் அரச உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு இவ்வீதியை மிக விரைவில் புனரமைத்து தரும்படி கிராம மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Loading...