Designed by Iniyas LTD
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு!
எக்ஸ்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 ரக பெற்றோல் மற்றும் எக்ஸ்ட்ரா மைல் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகள், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு முதல் குறைவடைந்துள்ளன என்று, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. எக்ஸ்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 ரக பெற்றோலானது, 121 ரூபாய்க்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த விலை, நேற்று நள்ளிரவு முதல், 2 ரூபாயால் குறைவடைந்த நிலையில், இன்று முதல் 119 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதேவேளை, இதுவரை காலமும் 97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எக்ஸ்ட்ரா மைல் டீசலும், இரண்டு ரூபாயால் குறைவடைந்த நிலையில், இன்று முதல் 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
உலகச் சந்தையில், எரிபொருட்களுக்கான விலைகள் குறைவடைந்துள்ளமையைக் கருத்திற்கொண்டே, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்தது.