Designed by Iniyas LTD
பெண் போராளிகளின் மிகச்சிறந்த தாக்குதல் முறியடிப்புச் சமர் வரலாற்றில் பதியப்பட்ட வேன்டிய நாள் இன்று…
பெண் போராளிகளின் மிகச்சிறந்த தாக்குதல் முறியடிப்புச் சமர் வரலாற்றில் பதியப்பட்ட வேன்டிய நாள் இன்று.
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும்,
தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினது நினைவு நாள் இன்றாகும்.
ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவோடு டாங்கிகளின் துணையுடன் நாகர்கோவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரின் பாரிய படை நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் களமாடி படைநகர்வை முற்றாக முறியடித்தனர்.
முற்று முழுதாக பெண் போராளிகளே இந்த முன்னகர்வு முயற்சியை முறியடித்து சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர்.
இந்த வெற்றிகர முறியடிப்புத் தாக்குதலின்போது 38 பெண் போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.





