Designed by Iniyas LTD
பொலிஸ் நடமாடும் சேவை நிறைவு விழா…
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தால் நடத்தப்பட்ட நடமாடும் பொலிஸ் நிலையத்தில் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது
கிராமங்களில் வாழும் மக்களுக்கான சேவையை வழங்கி மக்களுடனான உறவை வலுப்படுத்தும் முகமாக பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலுக்கமைய மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி B P J ஜானக புஸ்பகுமார அவர்களது தலைமையில் கடந்த 2018.05.20 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை மாதகாலமாக இயங்கி இன்று நடமாடும் பொலிஸ் நிலைய நிறைவு விழா இடம்பெற்றது
இந்த நடமாடும் சேவை மூலம் மக்களுக்கான பல்வேறு சேவைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது அத்தோடு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சமய நல்லிணக்க வேலைத்திட்டம் சிரமதானம் பாடசாலை மாணவர்களுக்கான வீதி ஒழுங்குகள் உள்ளிட்ட பயிற்சி பட்டறைகள் விளையாட்டு நிகழ்வுகள் என பல்வேறு திட்டங்கள் சுமார் ஒருலட்சத்து அறுபதாயிரம் நிதி பங்களிப்புடனும் பல மனித வலுக்களின் உதவியுடனும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
இன்றைய இறுதிநாள் நிகழ்வில் மதகுருக்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த கந்தேவத்த உள்ளிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் றா. றமேஸ் இராணுவ அதிகாரிகள் கிராம அலுவலர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்
இந்த திட்டத்தின் மூலம் அம்பகாமம் ஒலுமடு கரிப்பட்டமுறிப்பு மணவாளன்பட்டமுறிப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயனடைந்துள்ளனர்