தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பேருந்து வரவில்லை என மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

sc
பாடசாலை பேருந்து சேவை சீரின்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். தமக்கு நீதி வழங்க உதவுமாறு கோரி உதயன்  நாளேட்டு அலுவலகம் முன்பாக நூற்றுக் கணக்கான மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

யாழ்ப்பாணத்தில் இருந்த அச்சுவேலி வரையிலான பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் சிறீலங்கா போக்குவரத்து சபைக்கு சொந்தமான மாணவர் பேருந்துகள் இரண்டு வாரமாக சேவையில் ஈடுபடவில்லை.

வாரத்தில் புதன்கிழமைகளில் மாத்திரம் குறித்த வழியினுடான சேவையில் ஈடுபடுவதற்காக ஒரு பேருந்தே அனுமதிக்கப்படுகின்றது. ஏனைய நாட்களில் மாணவர்கள் பேருந்திற்காக மாலை வரை காத்திருந்து பணம் செலுத்தி வீடு செல்லவேண்டியுள்ளது.

இது தொடர்பாக நடத்துநர் மற்றும் ஓட்டுனருடன் முரண்பட்டதாகவும் அதற்கு அவர்கள் கோண்டாவில் போக்குவரத்து காரியாலயத்துக்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு கூறpயிருக்கின்றனர். அதற்கு மாணவர்கள் உடனடியாக உதயன் அலுவலகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அங்கு சென்ற மாணவர்கள்
நாங்கள் கோண்டாவில் போக்குவரத்து காரியாலயத்துக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை, ஆனால் உதயனுக்கு வர எங்களுக்கு வசதி தேவையில்லை, நாங்கள் எல்லோரும் நடந்தே வந்துள்ளோம். நாங்கள் உங்களிடம் சொன்னால் தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும். அதனால் தான் உங்களிடம் வந்துள்ளோம் என தெரிவித்தனர்.

இவ்வாறு மாணவர்கள் உதயனுக்கு முன்னால் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது சிறீலங்கா போக்குவத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது..

sc2

Comments
Loading...