Designed by Iniyas LTD
கைதடியில் விபத்து நான்கு பேர் படுகாயம் .

கைதடியில் ஏ9 வீதி கைதடிப்பிள்ளையார் கோவில் ஆலயத்திற்கு அருகாமையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 05.15 மணியளவில் இடம் பெற்ற இவ் விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் கல்விச் சுற்றுலாவிற்காக பாடசாலை மணவர்களை ஏற்றிவந்து திரும்பி பயணித்துக் கொண்டிருந்த பேரூந்தும் யாழ் நேக்கி வந்த கொண்டிருந்த கன்ரர் வாகனமும் மோதிக் கொண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.