தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொது பல சேனாவின் ஞான­சார தேரரை கைது செய்ய உத்தரவு!

showImageInStoryகாணாமல் போகச் செய்­யப்­பட்ட பிர­பல ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட தொடர்­பி­லான வழக்கின் போது பிர­கீத்தின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை மன்­றுக்குள் வைத்து திட்டித் தீர்த்து அச்­சு­றுத்­தி­விட்டு வெளி­யேறிச் சென்ற பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை நீதி­மன்ற அவ­ம­திப்பு குறித்த குற்றச் சாட்டில் கைது செய்­யு­மாறு நீதி மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.
ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி ரங்க திஸா­நா­யக்க இதற்­கான உத்­த­ரவை ஹோமா­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு நேற்று பிறப்­பித்தார்.
பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போகச் செய்­யப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று ஹோமா­கம நீதிவான் ரங்க திஸா­நா­யக்க முன்­னி­லையில் நடைபெற்றது.
இதன் போது பாதிக்­கப்­பட்ட எக்­னெ­லி­கொட குடும்­பத்தின் சார்பில் சந்­தியா எக்­னெ­லி­கொ­டவும் மன்­றுக்கு வருகை தந்­தி­ருந்தார். இதனை விட பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் உள்­ளிட்ட பலர் இந்த விவ­கா­ரத்தில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் வீரர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் வித­மாக மன்­றுக்கு வருகை தந்­தி­ருந்­தனர்.
இந் நிலையில் திறந்த நீதிமன்றில் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை மோச­மாக திட்டித் தீர்த்­துள்ளார். அத்­துடன் அச்­சு­றுத்­தியும் உள்ளார். பின்னர் அவர் மன்­றி­லி­ருந்து வெளி­யேறிச் சென்­றுள்ளார். இந்த விட­யத்தை உட­ன­டி­யா­கவே பாதிக்­கப்­பட்ட தரப்பின் சார்பில் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணிகள் நீதிவான் ரங்க திஸா­நா­யக்­கவின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தனர்.
இத­னை­ய­டுத்து திறந்த மன்றில் நீதி­மன்றை அவ­ம­தித்த குற்றச் சாட்­டுக்­காக ஞான­சார தேரரை கைதுச் செய்­யு­மாறு ஹோம­கம பொலி­ஸா­ருக்கு நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்தார்.
நேற்­றைய வழக்கு விசா­ர­ணையின் போது இந்த விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களைச் செய்யும் குற்றப் புல­னாய்வுப் பிரிவினர் மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்றில் முன் வைத்­த­துடன் அரச தரப்பில் சிரேஷ்ட சட்­ட­வாதி திலீப பீரிஸ் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.
இது தொடர்பிலான விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்குவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளதால் சிக்கல் இல்லை என தெரிவித்த நீதிவான் வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Comments
Loading...