தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொத்துவில் கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் உதைபந்து சம்பியன்

பொத்துவில் கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகத்திற்கும், ரை ஸ்டார் இளைஞர் கழகத்திற்குமிடையில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் 1:0 என்ற அடிப்படையில் பொத்துவில் கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் வெற்றியீட்டியது.

பொத்துவில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.ஷமீர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 33வது தேசிய விளையாட்டு விழாவையொட்டி, ஏற்பாடு செய்த இப்போட்டி பொத்துவில் பசறிச்சேனை விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

பொத்துவில் பிரதேச இளைஞர் கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பொத்துவில் கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகமும், பொத்துவில் ரை ஸ்டார் இளைஞர் கழகமும் தெரிவு செய்யப்பட்டன

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பத்தில் கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் ரை ஸ்டார் இளைஞர் கழகத்திற்கெதிராக ஒரு கோளினைப் புகுத்தி வெற்றியீட்டியது. இதன் மூலம் கோல்ட் ஸ்டார் கழகம் மாவட்ட மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் நடுவர்களாக என்.ஏ.அப்ரின், பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் ஏ.எம்.எம்.சஹ்ரின், எம்.எஸ்.பர்ஸான். எம்.ஜே.பெமி அஹமட் ஆகியோர் பணியாற்றினர். பொத்துவில் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ஏ.எம்.நௌபல், சம்மேளன உறுப்பினர்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Comments
Loading...