Designed by Iniyas LTD
பொன்சேகாவை சீண்டும் கோத்தபாய
இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாத இராணுவத் தளபதி பொன்சேகா, தானே போரை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்று எவ்வாறு கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
நேற்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் சாட்சியம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். இராணுவத் தலைமையகத்துக்குள் நுழைந்து இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடாத்தும் அளவுக்கு பலவீனமடைந்திருந்த பாதுகாப்பை சரி செய்ய முடியாமல் போன ஒருவர் தான் இந்த சரத் பொன்சேகா. யுத்தத்தைக் கொண்டு வருவதற்கு விமானப்படை, கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை போன்ற அமைப்புக்கள் பாரிய பங்களிப்பை வழங்கினர்.
இவற்றை மறந்து எப்படி ஒருவர் மாத்திரம் இதனைச் செய்தார் என்று கூறுவது. 2000 ஆயிரம் வாக்குகளைக் கூட பெற முடியாமல் போன ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும், அமைச்சும் கிடைக்கப் பெற்றால், இவ்வாறு தான் தங்களுக்கு உதவியவர்களுக்கு விசுவாசத்துக்காக எதையும் கூறுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.