தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இது ஸ்ரீலங்கா அரசின் பொறுப்பற்ற வெளிப்பாடு!

kilinochci

கிளிநொச்சியில் கடந்த வருடம் மே மாத்தில் நல்லாட்சி அரசு எனக்கூறிக்கொள்ளும் மைத்திரி அரசால்  மத்திய வங்கியின் கிளை அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இதன் பெயர் பலகை ஒன்றில் கிளிநொச்சியின் பெயரை மாற்றியுள்ளனர் ஸ்ரீலங்காவின் மத்திய வங்கியினர்.

அத்துடன் பிரதேச அலுவலகம் என்பதையும் தமது பெயர் பலகையில் பிழையாக எழுதியுள்ளனர்.

இதனைக் கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர். இவை தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் செயற்பாடு என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மொழியை காலம் காலமாக இவ்வாறு அரசுகள் கொச்சைப்படுத்துவது அதன் வெளிப்பாடே என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசு தமிழ்மொழி விடயத்தில் பொறுப்பின்றி நடப்பதற்கு ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இவ்வாறான பெயர் பலகைகள் எடுத்துக்காட்டாகின்றன.

தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் ஸ்ரீலங்கா அரசு மதிப்பதில்லை என்ற பொறுப்பற்ற செயலின் வெளிப்பாடு இது என்று செண்பகத்திற்கு கருத்துத் தெரிவித்த யாழ் பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் ஒருவர் கூறினார்.

Comments
Loading...