Designed by Iniyas LTD
போக்கிமான் கோ விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களை வழிப்பறி செய்த கும்பல்
ஜிபிஎஸ் மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து விளையாடும் ‘போக்கிமான் கோ’ ரியாலிட்டி கேம் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றது. 
ஆண்ராய்டு, ஐபோன் போன்களின் மூலம் விளையாட முடியும் இந்த கேமால், அனைவரும் ஈர்க்கப்பட்டு சுற்றித்திரிகிறார்கள். இந்நிலையில், கடந்த செவ்வாக்கிழமை அன்று, வடக்கு லண்டன் பூங்காவில் ‘போக்கிமான் கோ’ கேம் விளையாடிக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களிடம் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்துள்ளது. துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட அந்த கும்பலிடம், மூன்று இளைஞர்களும் அவர்களுடைய மொபைல் போன்களை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
இதுபோன்ற சம்பவம் பிரிட்டனில் அரிதான ஒன்றாகும் என்று கூறிய போலீசார், அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.