தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போதைப்பொருள் வைத்திருந்த இளம் யுவதி கைது

கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.photo

முகத்துவாரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த  இளம் யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுவதியிடம் இருந்து 6.950 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 23 வயதான இந்த யுவதி கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபரான யுவதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Comments
Loading...