தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போதை பொருள் பாவனைக்கு எதிராக முள்ளிவாய்க்கால் மக்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கில் தேசிய போதை ஒழிப்புவாரத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு விடியல் சனசமூகத்தினரால் இந்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .இதன் ஒரு அங்கமாகவே முள்ளிவாய்க்கால் மேற்கு மக்களால் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது .

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “ஏற்றத்தாழ்வு பார்க்காத போதை மது” , மதி மயக்கிட துடிக்கும் மதுவை ஒழி “,மதியை போக்கும் மதுவே போ போ ” போதை அற்ற தேசத்தை உருவாக்குவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .


Comments
Loading...