தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போராட்டத்தில் ஈடுபட்ட காணமல் ஆக்கப்பட்டவரின் தாயை கடுமையாக தாக்கிய ஸ்ரீ புலனாய்வாளர்கள்!

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாயகத்தில் நடக்கும் எமது உறவுகளின் தொடர்போராட்டத்தால் ஸ்ரீலங்கா அரசுக்கு பல நெருக்கடிகளை கொடுத்துள்ளது.

இதனால் எமது மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த பல நாச வேலைகளை ஸ்ரீ புலனாய்வுத்துறை செய்து வருகின்றது.

கடந்த 14.08.2017 அன்று முல்லைத்தீவில் வீதியால் வந்துகொண்டிருந்த ஒரு தாயை ஸ்ரீ புலனாய்வாளர்கள் சிலர் வழிமறித்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவுகளின் போராட்டத்தில் பங்குகொள்ள கூடாது என கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்களுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Comments
Loading...