தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போராட்டத்தில் உள்ள பெண்களையும் ஊடகவியலாளர்களையும் வீடியோ புகைப்படம் எடுக்கும் இராணுவம்…

இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறுகோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

2017.03.01 அன்று ஆரம்பித்த மக்களது நிலமீட்பு போராட்டத்தில்  .கடந்த ஒருவருடங்களுக்கு முன்பு ஒருதொகுதி காணிகள் விடுவிக்கப்ட்டுள்ள நிலையில் மிகுதி காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் .

இந்த காணிகளை முழுமையாக விடுவிக்க கோரி மக்கள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்.

இந்நிலையில் மக்களது போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை இராணுவம் உயரமான பகுதியில் இருந்து வீடியோ புகைப்படம் எடுத்து வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அதோடு கேப்பாபுலவு இராணுவ முகாமின் பல பகுதிகளில் நவீன கமராக்கள் பொருத்தி அங்கு போராடும் மக்களையும்,

அவர்களுக்கு ஆதரவு தர வருபவர்களையும் வீடியோ எடுத்து வருவதோடு பல்வேறு கமராக்கள் மூலம் இராணுவத்தினர் ஓடி ஓடி ஒளிப்பதிவு செய்துவருகின்றனர்.

மேலும்  அங்கு வருபவர்களது வாகனங்களது விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்

இதேவேளை  இராணுவத்தினர் அங்கு செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுப்பதோடு வீடியோ பதிவும் செய்து அச்சுறுத்தல் விடுகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் போராட்ட இடத்தில் உயரமான பகுதிகளில் இவ்வாறு இராணுவம் இருந்து வீடியோ எடுப்பது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Loading...